Sunday, February 18, 2007

T.A.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை - ஓர் அறிமுகம்.

'நம் வாழ்வின் உயர்வுக்கு நம்மை கனவுக் காணுங்கள்' என்றார் நமது பெருமதிப்பிற்குறிய ஜானாதிபதி மேன்மை மிகு
திரு.அப்துல் கலாம் அவர்கள். நம்மைக் குறித்த நம்முடைய நேற்றைய கனவுகள்தான் இன்றைக்கு நம்மை வடிவமைத்திருக்கிறது
என்பதை எவர்தான் மறுக்கமுடியும். இன்னும் விசாலமான நமது கனவுகளும், அதையொட்டிய நமது முயற்சிகளும், அந்த
திசைப்பார்த்த கடின உழைப்பும் நாளை நமதின் வெற்றிகளாக விடியச்செய்யும் என்பதை யார்தான் மறுக்கமுடியும்?

புகழ்கள் பல கொண்ட, கீர்த்திகளில் மிளிரும் சீர்காழியில், கல்வியின் வழியே மாணவ/ மாணவிகளின் அறிவு கண்ணைத் திறந்து
வைத்த கொடையாளர்களும், அதற்கு துணைபுரியும் அமைப்புகளும் பற்பலஉண்டு. தங்களது சீரியப் பணியை தொடர்ந்துஅவைகள் செய்துக்கொண்டிருக்க, அந்த வழியில் இன்றைக்கு அந்த மண்ணில் 'நிறைய கனவுகளுடன்' இன்னொரு விதை
ஊன்றப்பட்டிருக்கிறது.

சீர்காழியில் சென்ற ஆண்டு துவக்கப்பட்ட, 'T.A.Abdul Hameed Educational Trust' ( டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை)தன் பணியாகப் பல கனவுகளை வலுவாகவே கொண்டிருக்கிறது. மனித நேயத்தையும், மத நல்லிணக்கத்தையும் அஸ்திவாரமாகக்கொண்டு, சீர்காழி வாழ் மாணவ மாணவிகளின் கல்விமேன்மையை ஊக்கிவிப்பதையே தனது பணியாக கட்டியெழுப்ப
நினைக்கிறது.

இதன் ஸ்தாபகர் A.Abdul Malick, B.E., அவர்கள் ( ஏ.அப்துல் மாலிக், பி.இ., ) ஆரம்பத் தொடக்கமாக தன்பகுதி மாணவமாணவிகளுக்கு தன்னார்வமுடன் தன்னால் இயன்ற பொருள் உதவிகளை, தனது தந்தை வழியில் நின்று செய்யத்துவங்கினார்.
தொடந்து, அடுத்த கட்டமாக இந்த கல்வி அறக்கட்டளையை தனது தந்தையின் பெயரிலேயே துவங்க திட்டமிட்டு
செயல்படுத்தவும் துவங்கினார்.

சீர்காழியில், தான்வசிக்கும் பகுதியான 'தாடாளன் கோவில் வட்டத்தை' எல்லையாக எடுத்துக்கொண்டு, அந்த பகுதி மாணவ
மாணவிகளின் கல்வியில் அக்கறையும்/ கிரியையான உதவிகளையும் செய்யத்துவங்கிய இந்த கல்வி அறக்கட்டளை இன்றைக்கு
சீர்காழியும் அதன் சுற்று வட்டார மாணவ மாணவிகளும் பயன் பெறத்தக்க 'I.A.S. Academy' ஒன்றை தொடங்கும் எண்ணம்
கொண்டிருக்கிறது.

இந்த அறக்கட்டளையின் தொடக்கவிழா 2005 / டிசம்பர் மாதத்தின் மத்தியில் 'மைலாடுத்துறை/ பெஸ்ட் கெட்டரிங் காலேஜ்வளாகத்தில்/ மிகவும் எளிய முறையில் துவங்கியது. அதன் அடுத்த எழுச்சியாக, 2005 / 06 கல்வியாண்டில், சீர்காழி தாடளான்
வட்டத்தில் 'S.S.L.C. & +2' தேர்வு எழுதிய மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்துவதாக இருந்தது. அந்த பகுதி 'S.S.L.C. & +2'
மாணவ மாணவிகளில் அதிக மார்க் எடுப்பவர்களுக்கு பரிசு அறிவித்து, ஊக்கப்படுத்தியது. தேர்வு முடிவு வந்த பிறகு பரிசும்வழங்கியது.

இதற்கான விழாவாக, 'T.A.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை நடத்தும் கல்வி விழா' என்று 10.07.06 அன்று நடத்தி,'S.S.L.C.' யில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மூன்று பேர்களுக்கும்/ மாணவிகள் மூன்று பேர்களுக்கும் பரிசு
வழங்கியது. அதுபோலவே '+2' வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மூன்று பேர்களுக்கும். மாணவிகள் மூன்று
பேர்களுக்கும் பரிசு வழங்கியது. அது தவிர, ஊக்க நிதியாக மூன்று மாணவர்களுக்கு நிதிவழங்கப்பட்டது.

இந்த விழாவுக்காக, தன்னம்பிக்கைச் சார்ந்தப் புத்தகங்களையும், வாழ்வில் முன்னேற்றம் கண்டவர்களின் புத்தகங்களையும்,
மாணவ/மாணவிகளுக்கான அறிவுரை கூறும் புத்தகங்களையும் நிறைய வரவழைத்து, மாணவ/மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.மாணவ/மாணவிகளைத்தவிர சீர்காழியில் & சீர்காழி தாலுக்காவிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளின் நூலகங்களுக்கும்/ சீர்காழிபொது நூலகத்திற்கும் ஏராளமான புத்தகங்களை இலவசமாக வழங்கியது.

தொடர்ந்து அதன் பணி எல்லோரும் பாராட்டும் படியே இருந்தது. பொருளாதாரக் குறைவால் பள்ளி/கல்லூரி படிப்புகளை
தொடரமுடியாத மாணவ/மாணவிகளுக்கு நிதி உதவி அளித்தது. சென்ற 25.01.2007 அன்று L.M.C. மேல்நிலைப் பள்ளியில்,
மாணவர்களுக்கு கல்விக்கானத் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 'வாருங்கள் வெல்வோம்' என்கிற நிகச்சி ஒன்றினையும்
சிறப்பான முறையில் நடத்தியது. விழாவிற்கு வந்து கலந்துக் கொண்ட திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் 'காலமும் -
வெற்றியும்' என்கிறத் தலைப்பில் மிக பயனுடைய ஓர் உரையினை நிகழ்த்தினார். பள்ளி மாணவ/ மாணவிகள் மட்டுமல்லாது,
பொதுமக்களும் விழாவிற்கு வந்திருந்துசிறப்பித்து மகிழ்ந்தனர்.

நிறுவுனர் திரு. ஏ.அப்துல் மாலிக் அவர்கள் இந்த அறக்கட்டளையின் பொது நோக்கமாக To Develop Awareness in the
Following என்று குறிப்பிட்டிருக்கும்....

1.Development of Lidrary in House/Village/Town
2.Carrier Education Guidance of Counseling
3.Personality Development for Individual
4.Public Speaking Practice Institute Development
5.Finencial Education Awereness

- இந்த ஐந்து வாக்கியங்களும் யோசிக்கத்தகுந்த / பின்பற்றத்தகுந்த மணிவரிகளாக அமைந்திருக்கிறது. மேலும் அவர் விழாமேடைகளில் பேசுகிறப் போதெல்லாம்.......

"உங்கள் வீட்டுச் செல்லக் குழந்தைகள், வருங்காலத்தில் செல்வக் குழந்தைகளாக மாறவேண்டும்" - என்று குறிப்பிடத் தவறமாட்டார். அவரது இந்த மனவெளிப்பாட்டின் பின்னணியை நாம் யோசிக்கக் கூடுமெனில் அவரது உயர்ந்த எண்ணத்தின் வெளிப்
பாட்டை நாம் நன்கு உணரமுடியும். வலைப்பூ வின் இந்த பக்கத்தின் வழியே, T.A.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை குறித்த
ஓர் எளிய அறிமுகத்தை வாசித்தறியும் அன்பர்கள் அனைவரும் இந்த கல்வி அறக்கட்டளையின் கனவுகள் அத்தனையும்
'மெய்ப்பட' மனமார வாழ்த்துகள் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

- தாஜ்...............
செயலாளர்,
T.A.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை,
சீர்காழி.

No comments: