Sunday, March 4, 2007

வாருங்கள்! வெல்வோம்!! - நிகழ்ச்சிசீர்காழி டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை சார்பில் வெற்றிக்கரமாக நடத்திக்காட்டிய மாணவர்களுக்கான 'வாருங்கள்! வெல்வோம்!!' என்ற நிகழ்ச்சி 25.01.07 அன்று சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலப்பள்ளியில் நடைப் பெற்றது.


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மோகந்தாஸ் அறிவானந்தம் தலைமை வகித்தார். அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளையின் தலைவர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். ஜேசீஸ் மண்டல தலைவர் இராமன் வரவேற் றார். கொள்ளிடம் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் வே. இரவிச் சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டதலைவர் காமராஜ், ஆசி ரியர் இராமதாஸ் ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக 'பாரதி' இயக்கதலைவர் இமயவர்மன் கலந்து கொண்டார்.


எல்லோரயும் வரவேற்று போசிய இராமன் அவர்கள் தன்னுடைய கலகலப் பான கணீர் பேச்சால் வந்திருந்த கூட்டத்தினரைதலை நிமிரவைத்தார். மோகந்தாஸ் அறிவானந்தம் அவர்கள், மாணவ மாணவிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் இந்த நிகழ்ச்சியால் தானும் தனது மேல்நிலைப் பள்ளியும், மகிழ்ச்சி கொள்வதாக குறிப்பிட்டார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்த டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. மாலிக் அவர் களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார்.


சிறப்பு அழைப்பாளாராக வந்திரு ந்த திரு. இமயவர்மன் அவர்கள் தனது உயிர்த்துடிப்பான பேச்சாற்றலால், அறக்கட்டளையின் தலைவர் மாலிக் அவர்களின் தொண்டுள்ளத்தையும், பரந்த நோக்கத்தையும் பாராட்டினார். தவிர, துபாயில் திரு. மாலிக் அவர்கள் சுமார் முப்பது வருடகாலமாக அற்றிவரும் பணியின் சிறப்பையும், அதனால் நம்மூர் வாசிகள் கொள்ளத்தக்க பெருமை யையும் குறிப்பிட்டுப் பேசினார்.

திரு.காமராஜ், திரு.இராமதாஸ், திரு. ரவிச்சந்திரன் ஆகியோர்கள் இந்த அறக் கட்டளையின் வளர்ச்சிக் குறித்தும், அதன் கல்விக்குறித்த பணிகள் குறித்தும் வியந்தார்கள். இப்படி ஊக்கிவிக்கும், தொண்டுள்ளம் கொண்ட இந்த அறக்கட் டளையை ஊரில்எல்லோரும் பாரட்டவேண்டும் எனவும், மாணவர்கள் இம் மாதிரியான அறக்கட்டளையின் பயன்களை அடைந்து, கல்வியில்உயர்ந்துக் காட்டவேண்டும் எனவும் கூறினார்கள்.


அடுத்துப் பேசிய டி.ஏ. அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளையின் ஸ்தாபக ரும், அதன் தலைவருமான திரு.மாலிக் அவர்கள்தனது யதார்த்தமான உரை யை நிகழ்த்தினார். சீர்காழி பகுதியில் கல்விப்பயிலும் மணவர்கள் அனைவ ரும் கல்வியில் சிறந்து,உயர்ந்த நிலைக்கு உயர உந்துதல் சக்திப் பெறவேண் டும் எனவும், தன்னம்பிக்கைச் சார்ந்து கடின முயற்ச்சி செய்தால் நிச்சயம்
வெற்றி கிடைக்கும் என்றார். வெற்றி என்பது பொருளாதார முன்னேற்றம் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்றார். இதற்குபெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு உறுதுனையாக இருக்கவேண்டும் என்றவர், தங்களது செல் லப் பிள்ளைகள் செல்வப் பிள்ளைகளாகவும் சிறக்க அவர்கள் சபதமெடுக்க வேண்டும் என்றார். மேலும் தொடர்ந்து அவர் பேசும் போது, தனது இந்த அறக் கட்டளைச் சார்பாக இப்பகுதி மாணவர்கள் பயனுறும் வகையில் ஐ.ஏ.எஸ். அக்கடமி ஒன்றை விரைவில் ஏற்படுத்த இருப்பதாக உறுதி அளித்தார். மாண வர்களின் கைத்தட்டல் காதைப் பிளந்தது.


விழாவில்சிறப்பு பேச்சாளராக பங்கெடுத்த் லேனா தமிழ்வாணன் அவர்கள் 'காலமும் - வெற்றியும்' எனும் தலைப்பில் மாணவர்கள் பயன்பெறும் வகை யில் தனது நட்சத்திர உரையினை நிகழ்த்தினார்:


கராத்தே கற்றுக்கொள்கிறவர்களுக்கு தெரியும் மனித உடம்பில் 27 இடங்கள் பலவீனமானவை என்று. அந்த இடத்தில் லேசாக தட்டினால் கீழே விழுந்து விடுவான்.. யார் யாரை எந்த இடத்தில் இடத்தில் தட்டிக்கொடுத்தால் எப்படி வருவார்கள் என்று சொல்ல முடியாது. யாருக்கு எந்த நேரத்தில் திருப்பம் வரும் என சொல்ல முடியாது. காந்திஜி அரிச்சந்திரா நாடகத்தை பார்த்தார். அவருடைய வாழ்க்கை பாதையே மாறிவிட்டது.


தென்னாப்பிரிக்காவில், 'பீட்டர் மாரீஸ் பர்க்' என்ற ஊர் உள்ளது. அந்த ஊர் தான் இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம் என்று சொன்னால் எத்தனை போர் நம்புவார்கள்? காந்திஜி 'பீட்டர் மாரீஸ் பர்க்' என்ற ஊரில் ரெயிலில் முதல் வகுப்பில் பயணம்மேற்கொண்ட போதுதான், அந்த ரெயிலில் பயணம் செய்த 'நீ கருப்பன் எதற்காக இந்த ரெயிலில் வருகிறாய்?' எனக்கேட்டு கீழே தள்ளிவிட்டான். இனவெறியோடு அந்த வெள்ளையன் நடந்து கொண்டான். அது எப்படி ஒரு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைவீழ்த்துகிற அளவிற்கு ஒரு வேகத்தை தந்தது காந்தியடிகளுக்கு யென நாம் அறிவோம். யாருக்கு எந்த்வொரு சம்பவம், எந்தவொரு வார்த்தை, எந்தவொரு சூழல், எந்தவொரு கணம்... மனிதனுக்கு தூண்டுதலை தருகிறது என்று சொல்லவே முடியாது.


ஒரு மனிதனுக்கு இரண்டுமுறை வேகம் வரவேண்டும். தட்டிக் கொடுத்தால் இன்னும் நன்றாக வருவேன் என்ற வேகம் வரவேண்டும். இன்னொன்று, குட்டி சுட்டிக்காட்டுகிறபோது அந்த வேகம் வரவேண்டும். மாணவர்களது வாழ்வில் இந்த இரண்டில்ஒன்றை அவர்கள் கண்டிருப்பார்கள். அதன் மூலம் அவர்கள் ஊக்கம்பெற்று தங்களது படிப்பில் வேகம் காமித்திருப்பார்கள்.இந்த இரண்டு நிலையை அவர்கள் எய்தியப் பிறகும் படிப்பில் அவர்கள் வேகம் கொள்ளவில்லை என்றால் அவர்கள்தங்களை தாங்களே தெரிந்தே மடமை யில் ஆழ்த்திக்கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.


மாணவர்கள் ஆகட்டும், பெரியவர்கள் ஆகட்டும் ஒன்று குறித்து 'நேரமில்லை என்று சொல்வார்களேயானால், அவர்களுக்கு அது குறித்து மனமில்லை என்றுதான் பொருள். எதில் ஒருவனுக்கு ஆர்வமிருக்கிறதோ அதில் அவனுக்கு நேரமிருக்கும். எதில்அவனுக்கு ஆர்வமில்லையோ அதில் அவனுக்கு நேரமிருக்காது. படிப்பில் ஒருவனுக்கு ஆர்வமிருந்தால் தானே நேரம் உருவாகும். 24 மணி நேரத்தை ஒருவன் எப்படி பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை பொறுத்துதான் ஒருவனின் வருங்காலவாழ்க்கை அமையும்.


வாழ்க்கையில் திரும்பபெர முடியாதது இரண்டே இரண்டுதான். ஒன்று உயிர், மற்றொன்று நேரம். உயிருக்கு ஒப்பான நேரத்தைஉயிர் மாதிரிப் போற்றுங் கள். ஒருவரது வாழ்வின் உன்னதம் என்பது எல்லாநிலைகளிலுமான அவனது உயர்வுதான். மாணவர்களே நேரத்தை வகுத்து பயன்படுத்தி உங்களை உயர்த் திக்கொள்ளுங்கள். மேலும் உங்களை நீங்கள் நம்புங்கள், மிகச் சிறந்த மாணவ னாக வருவேன் என்று. அந்த நம்பிக்கையும்கூட உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். போட்டிகள் நிறைந்த காலத்தில் வாழ்கிறீர்கள். 97, 98 சதவீதம் மதிப்பெண் பொற்றால்கூட விருப்பமான பாடத்தை படிக்க
முடியாமல் போகிறது. பெயருக்கு மார்க் எடுக்கலாம். ஆனால் நிஜத்தில் நீங்கள் பெயருக்கு மார்க் எடுக்காமல், பேர் சொல்லும்வகையில் மார்க் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியின் முடிவில், அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளையின் செயளாலர் தாஜ், நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட, நிகழ்ச்சி சிறக்க உறுதுணைப் புரிந்த, எல்லோருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.

*******

எழுத்தாளர் லேனா தமிழ்வாணனுக்கு விழா மேடையில் 'நன்மொழி சித்தர்' என்றப் பட்டத்தை அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

*******

டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்ளை சார்பாக, 'ஸ்பான்சர்' செய்யப்பட்ட 'பங்குசந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்' என்கிற புத்தகம் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கும் மற்றும் நூற்றுக்கு அதிகமான சீர்காழி நகர முக்கியஸ்தர்களுக்கும் இந்த புத்தகத்தை அறக்கட்டளைச் சார்பாக அன்பளிப்பாய் வழங்கப்பட்டது.

*******

இந்த நிகழ்ச்சியின் புகைப்படக் காட்சிகளை 'வாருங்கள்! வெல்வோம்!! - புகைப் படக் காட்சி' என்கிறத் தலைப்பில் காணலாம்.

*****

- தாஜ்
செயளாலர்
டி.ஏ.அப்து ஹமீத் கல்வி அறக்கட்டளை.சீர்காழி.
satajdeen@gmail.com
-----------------------

No comments: