Monday, March 5, 2007

மனதார வாழ்த்துவோம் - 'சமுதாயக் கவிஞர்' சீர்காழி இறையன்பன்
உங்களோடு சில மொழிகள்....

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுமைக்கும் நன்கு அறிமுகமான கவிஞர் திரு. இறையன்பன் அவர்கள். தமிழ்நாடு பூராவுமான இஸ்லாமியர்கள் அவரை அன்புடன் அறிவர். 'சமூதாய கவிஞர்' என்றால் அவர்களுக்கு இவர்தான் முதன்மையானவர். தீவிர இலக்கிய வட்டம் இவரை அறிமுகம் செய்து கொள்ளவில்லை என்றாலும்இவது கவிதைகள், இவர் சார்ந்த சமுதாய இதழ்களின் பக்கங்களில் தொடர்ந்து 30 வருடகாலமாக அலங்கரித்துக் கொண்டுதான்இருக்கிறது. கவிஞர் இறையன்பன் சீர்காழியைச் சேர்ந்தவர் மட்டுமல்ல அதற்கு பெருமைச் சேர்த்தவர்களிலும் ஒருவர்.

'சீர்காழியில் அறக்கட்டளை ஏற்படுத்திய பொறியாளர் அப்துல் மாலிக்!' என்கிற தலைப்பில் டி.ஏ. அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளைப் பற்றியும், அதன் நிறுவனர் அப்துல் மாலிக் அவர்களை பற்றியும் மனம் திறந்த அவரது பாராட்டை'அன்னை கதீஜா' (ஏப்ரல் - 5,2006) என்கிற இதழில், கட்டுரையாக எழுதியிருந்தார். இந்த அறக்கட்டளையின்பால்நேசம் கொண்டோரின் பார்வைக்கு அது இப்பொழுது.

- தாஜ்..

******

சீர்காழியில் அறக்கட்டளை ஏற்படுத்திய பொறியாளர் அப்துல் மாலிக்! - 'சமுதாயக் கவிஞர்' சீர்காழி இறையன்பன்.

----------------------------------------------------------------

இளம் வயதிலிருந்து கல்வியில் ஆர்வமும், கல்வித்தொண்டில் ஈடுபடுவதை இயல்பாகவும் கொண்டு சிறந்து விளங்கி வருபவர் பொறியாளர் ஹாஜி. ஏ. அப்துல் மாலிக். இவருடைய தந்தையான டி.ஏ.அப்துல் ஹமீத் அவர்கள் தனது பிள்ளைகளின் கல்விக்காக எல்லாவகையிலும் ஒத்துழைப்பு வழங்கினார். இப்படி அவர் அவர்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த நாட்டம் கொண்டதால் இரு மகன்கள் பொறியாளராகவும், ஒரு மகன் டாக்டராகவும், இன்னொரு மகன் பட்டதாரியாகவும் சிறந்து விளங்கி வருகிறார்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக செயல்பட்ட சிறப்பு மிக்க தந்தையின் பெயரை போற்றும் முகமாகவும், மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையின் உந்துதலா லும் தனது தந்தையின் பெயரிலேயே 'டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை' யெனஒன்றை சென்ற மாதம் ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதன் நோக்கங்களாக, 1. Development of Library in House/ Village/Town, 2. Carrier Education Guidance Couseling, 3.Personality Developement for Individual, 4. Public Speaking practice institute Development, 5. Financil Education Awareness. என்றஉயர்ந்த குறிக் கோள்களைக் கொண்டு இந்த அறக்கட்டளையை ஆரம்பித்து வைத்திருப்பது மிகவும் வரவேற்புக்குரிய செயலாகும்.

இதன் முதல் கட்டமாக, தன்னம்பிக்கை மாத இதழ் வெளியிட்ட 'தன்னம்பி க்கை வழிகாட்டி' என்ற ஆண்டு டைரியை முக்கியமானவர்களுக்கும், ஆசிரி யர்களுக்கும், சமுதாயச் சேவை புரிவோருக்கும், உயர் அதிகாரிகளுக்கும், வணிகப் பெருமக்களுக்கும்அன்பளிப்பாக வழங்கியதேடு இல்லாமல் மாணவ / மாணவிகளின் நலனுக்காக லேனா தமிழ்வாணன் எழிதிய 'மாணவ மாணவிகளுக்கான நேர நிர்வாகம்' என்றப் புத்தகத்தை தருவித்து சீர்காழி மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திற்கும் அன்பளிப்பாகவே வழங்கினார்கள். தொடர்ந்து இன்னும் பல அறிய நூல்களையும்வரவழைத்து மாணவ மாணவிகளுக்கு அதனையும் அப்படியே தந்துதவினார் அறக்கட்டளையின் ஸ்தாபகர்திரு.மாலிக் அவர்கள்.

துபாயில் பணிபுரியும் இவர், ஓய்விற்காக ஊர் வருகிறபோதெல்லாம் 'கல்வி...கல்வி... என்ற தாரக மந்திரத்தை ஓதாமல்ஒருநாளும் இருக்கமாட் டார்'. மாணவர்களை கூட்டி கல்வியின் அவசியம் குறித்து அவர்களிடம் பேசி / அழுந்த அறிவுரை பல கூறியும் கழிப்பார்.

இவ்வாண்டு முதல் S.S.L.C மற்றும் +2 வில் அதிகம் மதிப்பெண் வாங்கும் சீர்காழியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் பத்து பேர்களுக்கு குறையாமல் ஆயிரக்கணக்கில் தொகையாக பரிசுகள் வழங்க இந்த அறக்கட்டளை தொடங்கியுள்ளது நம் கவனத்தைக் கவருகிற ஒன்றாகும்.

கல்விக்காக தன்னையே அர்ப்பணித்துள்ள இந்த அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான, பொறியாளர் திரு. அப்துல் மாலிக் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் போற்றலாம், பாராட்டவும் பாராட்டலாம். இந்த உயர்ந்த உள்ளம் படைத்தவர்தனது தந்தையின் பெயரில் தொடங்கியுள்ள இந்த அறக்கட்டளை எல்லாவகையிலும் சிறந்தோங்க இறைவனிடம் கரம்
ஏந்துவோம். மேலும் மனதார வாழ்த்துவோம்.

********
வடிவமும் தட்டச்சும்: தாஜ்

satajdeen@gmail

No comments: