Sunday, March 18, 2007

நினைத்தேன் எழுதுகிறேன் - டாக்டர் அ. இரபியுதீன்



டி.ஏ. அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளைக்கான இந்த வலைப்பதிவின் பக்கங்களில், அமைப்பின் செய்திகளையும் தகவல்களையும் தாண்டி மனித வாழ்வியலின் முன்னேற்றம் சார்ந்த 'தன்னம்பிக்கை' பேசும் கட்டுரைகள், கவிதைகள் இனிஇடம் பெறலாம். மாணவ மாணவிகளின் கல்விச் சார்ந்த நுட்பமான வெளிப்பாடுகளையும் வெளியிட எண்ணம் உண்டு. தவிர, மதநல்லி ணக்கச் செய்திகளையும் இந்த பக்கங்களில் வெளியிட்டு நல்லெண்ணங் களைப் பரப்பவும் எண்ணம் உண்டு.

அந்த வகையில் இங்கே......

உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவரும், எங்கள் அறக்கட்டளையின் நலம் விரும்பியுமான டாக்டர் அ. இரபியுதீன் அவர்களின் கட்டுரை ஒன்றை பிரசுரித்து மகிழ்கிறோம். 'நம்ம ஊரு செய்தி' என்கிற மாதாந்திர இதழில் டாக்டர் அ. இரபியுதீன்அவர்கள் 'நினைத்தேன் எழுதுகிறேன்' என்கிற தலைப் பில் பல ஆண்டுகளாக பயன் தரும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்
கிறார்கள். கீழே காணும் கட்டுரை, பிப்ரவரி - 2007 இதழில் வெளிவந்தது.


இந்த கட்டுரை புத்தகங்களோடு உறவாடும் மனநிலைக் கொண்டது. புத்தகங் கள் அறிவின் உறைநிலம் அல்லது வாழ்வின் கிரியாவூக்கிகள் என்கிற பார் வையில், இந்த வலைப் பதிவில் மீண்டும் அந்தக் கட்டுரையை பதிவு செய்கி றோம். தவிர, துபாய் வாழ் தமிழர்களால் 'காக்கா' என்று அன்புடனும், மரியா தையுடனும் அழைக்கப்படும் ஜனாப். சையத்சலாவுதீன் அவர்களுக்கு
நம் இந்திய ஜனாதிபதி அவர்கள் 'சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்' விருது வழங்கியதை இந்தக் கட்டுரை மறவாமல் பேசுகிறது. அந்த வகையிலும் இந்தக் கட்டுரையை பதிவு செய்வதில் மகிழ்ச்சியுண்டு.


செயலாளர்
டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை.

***********************************************




நினைத்தேன் எழுதுகிறேன்.
-------------------------------------
- டாக்டர் அ. இரபியுதீன்

(உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர்)




சென்னையில் சென்ற மாதம் நடந்த புத்தகக் காட்சியை முதலமைச்சர் கலை ஞர் கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.அப்போது, ஆண்டுதோறும் ஐந்து சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு இலட்ச ரூபாய் பரிசு வழங்க தனது சொந்தப் பணத்திலிருந்து கலைஞர் ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்.!


புத்தகக் காட்சி நடத்தும் தென்னிந்திய நூல் வெளியீட்டாளர்களின் விற்பனை யாளர்கள் சங்கம் இந்தப் பரிசுகளை வழங்கும்.தானே தமிழ் இலக்கிய வளர்ச் சியில் ஈடுப்பட்டிருக்கும் முதல்வர் கலைஞர், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் செய்துள்ள மிகப் பெரிய உதவி, இது.


தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு என்றோ, தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு என்றோ இதுவரை எந்த நிறுவனமும், எந்த தனிப்பட்டவரும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தது இல்லை! கலைஞர் தனது சொந்தப்பணத்திலிருந்து இவ்வ ளவு பெரிய தொகையை வழங்கியதைப் பார்த்து தமிழர்கள் அனைவரும் பூரித் திருப்பார்கள்.


தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, தமிழ் மக்கள் அனைவரும் இதற்காகக் கலைஞரைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கி றார்கள். நானும் என் பங்கிற்கு கலைஞரை வாழ்த்துகிறேன்! மனதாரப் பாராட் டுகிறேன்.


சிறந்த சீர்திருத்தப் படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்படவேண்டும் என்று கலைஞர் கூறியுள்ளார். ஆனால், பரிசு யாருக்கு வழங்கப்படும், எப்படி பரிசுக்கு உரியவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார் கள் என்பதுஇன்னும் இறுதியாக்கப்படவில்லை. கலைஞரின் வழிகாட்டுதலு டன் இதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுந்தானே இந்தப் பரிசு? இதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.


சமுதாய முன்னேற்றத்துக்கு, சமுதாய சீர்திருத்தத்துக்கு, தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்களுக்கேஇந்தப் பரிசு வழங்கப்பட வேண் டும். மத்திய - மாநில அரசு விருதுகள், மற்ற நிறுவனங்களின் பரிசுகள் பெற்ற வர்களுக்கேமீண்டும் மீண்டும் பரிசு தராதபடி, வெளி உலகுக்குத் தெரியாதவர் களுக்கு வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும். எழுத்தை நம்பி வறுமை யால் வாடுகிற நல்ல எழுத்தாளர்களை நிறம் கண்டு வாழ்வளிக்க உதவுவ தாகவும் அமையவேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்தப் பரிசு களை வழங்கவேண்டும்.


இந்தப் புத்தகக் காட்சி நடந்தபோது நான் சென்னையில் இருந்தேன். இரண்டு நாள் சென்று பார்த்தேன். நெருக்கடி இல்லாமல்வசதியாகப் பார்க்கும்படி புத்தகக் காட்சி அமைக்கப் பட்டிருந்தது. நல்ல கூட்டமும் இருந்தது. 'சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்' என்று இந்தியக் குடியரசுத் தலைவரின் விருது பெற்ற துபாய் தொழிலதிபர் சையது சலாவுதீன் அவர்களுக்கு இந்தப்புத்தகக் காட்சியில் மணிமேகலை பிரசுரம் சார்பில் பாராட்டு விழாவும், புதிய புத்தக வெளியீட்டுவிழாவும் நடந்தது. அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன்.


தொழிலதிபர் தாவுத் பாட்சா, ஜலால், ஜபுருல்லா, இலங்கை எழுத்தாளர் மானா மக்கீன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.சையத் சலாவுதீன் அவர்களுக்கு லேனா தமிழ்வாணனும், எனக்கு யுனிவர்சல் ஷாஜகானும் பொன்னாடை போர்த்தினார்கள்.மணிமேகலை பிரசுரத்தின் அந்த இருபத்தி இரண்டு புதிய புத்தகங்களையும் நடிகர் சத்தியராஜ் வெளியிட, பா.இராமச்சந்திரஆதித்தனும் நானு முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டோம். நான் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளும்போது பத்தாயிரம் ரூபாய் கொடுத்தும் சிறப்பித்தேன்.


சீர்காழி மாலிக், மருத்துவர் அக்பர் கௌசர், அரங்க நெடுமாறன், எஸ்.பி.முத்து ராமன், தாஜ், இலங்கை பாயிக் ஆகியோரும்விழாவில் கலந்துகொண்டு சிறப் பித்தார்கள். சீர்காழி சிவ சிதம்பரம் இறை வணக்கம் பாடினார். ரவி தமிழ்வா ணன் அனைவரையும் வரவேற்றார்.


புத்தகக் காட்சியில் இலங்கை இலக்கியப் புரவலர் முனைவர் காசிம் உமர், கார்த்திக் சிதம்பரம், சரத்குமார், ராதிகா சரத்குமார்,நடிகை ரோகினி, சேவியர் மணியன் செல்வன், பர்வீன் சுல்தானா ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சரத்குமார்-ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு லேனா தமிழ் வா ணன் எழுதிய ஒரு பக்கக் கட்டுரை நூலைகளை அன்பளிப்பாகவழங்கினேன்.

****

1 comment:

தாஜ் said...
This comment has been removed by the author.