Saturday, January 31, 2009

புத்தகப் பரிசளிப்பு விழா! ஜனவரி - 2009 / Part - 1

புத்தகப் பரிசளிப்பு விழா!
-----------------------------------
மாணவ மாணவிகளின் பெரும் விழா!!
------------------------------------------------------
கற்றோரும் பெற்றோரும் பாராட்டும் திருவிழா!!!
----------------------------------------------------------------------
டி.ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை சார்பாக சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் மாணவ மாணவிகளுக்கு'சுய முன்னேற்றம் சார்ந்த' புத்தகங்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி சிறப்பிக்கும் நிகழ் ச்சியை வெகு விமர்சையாக நடந்தது. மதிப்பிற்குறிய திரு.லேனாதமிழ்வாணன் அவர்கள் எழுதிய 'முயன்றால் முடியும்' 'நேர நிர்வாகம்' என்கின்ற தலைப்புகள் கொண்ட அந்தப் புத்தகங்களை திரு.ரவிதமிழ்வாணன் அவர்கள் அந்த விழா வில் பங்கெடுத்து புத்தகங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்பித் தார்கள்.

23.01.2009 வெள்ளிக்கிழமை அன்று ஆக்கூர் அரபி மதரஸாவுக்கு உடபட்ட உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி, மாயூரம் ஆசாத் பெண்கள் உயர்நிலைப் பள்ளி வழியாக, சீர்காழியில் உள்ள அனைத்து உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் கான்வெண்ட்டுகளில் 10 & +2 படிக்கும் அனைத்து மாணவ மாணவிகள் பலனடையும் வகையிலும், ஊக்கப் படுத்தும் வகையிலும் இந்த விழா சிறப்புற நடைந்தேறியது.
*
ஆக்கூர் அரபி மதரஸாவுக்கு உடபட்ட உயர்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி விழா கோலமாகவே நடந்தது. அந்தப் பள்ளிக் கூடத்தின் பொறுப்பு நிர்வாகி யான ஜனாப். இக்பால் அவர்கள் மிகுந்த ஆர்வத்தேடு இந்த நிகழ்ச்சியை ஒழு ங்குப் படுத்தி தந்து உதவினார்கள். அது போலவே மாயூரம் ஆசாத் உயர் நிலைப் பள்ளி நிகழ்ச்சியை ஜனாப். எஸ்கொயர் இக்பால் அவர்கள் பொறுப் பேற்று ஒழுங்குப் பண்ணித் தந்தார்கள். சீர்காழி பள்ளிகளின் அனைத்து பொறு ப்பாளர்களும், தலைமை ஆசிரியர்களும் நிகழ்ச்சி செவ்வன்னமே அமைய பெரும் தொண்டாற்றி உதவிப் புறிந்தார்கள்.
*
ஒவ்வொரு பள்ளியிலும் அந்தப் பகுதி யை சார்ந்த, கல்விக்கு உறுதுணையாக இருப்பவர்களை அழைத்து, நிகழ்ச்சி மேடையில் அமர்த்தி அவர்களை கௌர வித்து அப்துல் ஹமீத் கல்வி அறக்கட் டளை பெறுமைக் கொண்டது. திரு.ரவி தமிழ்வாணனுடன் சென்று எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொண்ட 'துபாய் சாதிக்' அவர்களுக்கும், இத்த னைப் பெரிய நிகழ்ச்சி நடந்தேற ஒட்டு மொத்த ஒருங்கிணைப்பாளராக இருந்து பணியாற்றிய அறக்கட்டளையின் இணைச் செயலாளர் திரு. ரவி அவர்களுக்கும் விவேகனந்தா பள்ளியின் விழா மேடையில் பொன்னாடைப் போற்றி சிறப்பும் செய்யப்பட்டது.
*
விழாவில் பங்கெடுத்த ஏனைய முக்கியஸ்தர்களும், ஆசிரியர் தலைமையா சிரியர் பெருமக்களும், மாணவ மாணவிகளும்டி.ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான திரு.அப்துல் மாலிக் B.E., அவர்களின் இந்த தொண்டுள்ளப் பணியை சிறப்பித்து மனதாரப் பாராட்டி னார்கள்.
*
- தாஜ் / செயலாளர்டி.
ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை.
31.01.2009
*** *** ***














புத்தகப் பரிசளிப்பு விழா! ஜனவரி - 2009 / Part - 1 A















புத்தகப் பரிசளிப்பு விழா! ஜனவரி - 2009 / Part - 2





புத்தகப் பரிசளிப்பு விழா! ஜனவரி - 2009 / Part - 3

புத்தகப் பரிசளிப்பு விழா...
-----------------------------------
டி.ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை சார்பாக சென்ற வருடத்தைப் போ லவே இந்த வருடமும் மாணவ மாணவிகளுக்கு'சுய முன்னேற்றம் சார்ந்த' புத்தகங்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி சிறப்பிக்கும் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடந்தது. மதிப்பிற்குறிய திரு.லேனாதமிழ்வாணன் அவர் கள் எழுதிய 'முயன்றால் முடியும்' 'நேர நிர்வாகம்' என்கின்ற தலைப்புகள் கொண்ட அந்தப் புத்தகங்களை திரு.ரவிதமிழ்வாணன் அவர்கள் அந்த விழா வில் பங்கெடுத்து புத்தகங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்பித் தார்கள்.
*
23.01.2009 வெள்ளிக்கிழமை அன்று ஆக்கூர் அரபி மதரஸாவுக்கு உடபட்ட உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி, மாயூரம் ஆசாத் பெண்கள் உயர்நிலைப் பள்ளி வழியாக, சீர்காழியில் உள்ள அனைத்து உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் கான்வெண்ட்டுகளில் 10 & +2 படிக்கும் அனைத்து மாணவ மாணவிகள் பலனடையும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த விழா சிறப்புற நடைந்தேறியது.

ஆக்கூர் அரபி மதரஸாவுக்கு உடபட்ட உயர்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி விழா கோலமாகவே நடந்தது. அந்தப் பள்ளிக் கூடத்தின் பொறுப்பு நிர்வாகி யான ஜனாப். இக்பால் அவர்கள் மிகுந்த ஆர்வத்தேடு இந்த நிகழ்ச்சியை ஒழுங்குப் படுத்தி தந்து உதவினார்கள். அது போலவே மாயூரம் ஆசாத் உயர்நிலைப் பள்ளி நிகழ்ச்சியை ஜனாப். எஸ்கொயர் இக்பால் அவர்கள்
பொறுப்பேற்று ஒழுங்குப் பண்ணித் தந்தார்கள். சீர்காழி பள்ளிகளின் அனைத்து பொறுப்பாளர்களும், தலைமை ஆசிரியர்களும் நிகழ்ச்சி செவ்வன்னமே அமைய பெரும் தொண்டாற்றி உதவிப் புறிந்தார்கள்.
*
ஒவ்வொரு பள்ளியிலும் அந்தப் பகுதியை சார்ந்த, கல்விக்கு உறுதுணையாக இருப்பவர்களை அழைத்து, நிகழ்ச்சி மேடையில் அமர்த்தி அவர்களை கௌர வித்து அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை பெறுமைக் கொண்டது. திரு.ரவி தமிழ்வாணனுடன் சென்று எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொண்ட 'துபாய் சாதிக்' அவர்களுக்கும், இத்தனைப் பெரிய நிகழ்ச்சி நடந்தேற ஒட்டு மொத்த ஒருங்கிணைப்பாளராக இருந்து பணியாற்றிய அறக்கட்டளையின் இணைச் செயலாளர் திரு. ரவி அவர்களுக்கும் விவேகனந்தா பள்ளியின் விழா மேடையில் பொன்னாடைப் போற்றி சிறப்பும் செய்யப்பட்டது.
*
விழாவில் பங்கெடுத்த ஏனைய முக்கியஸ்தர்களும், ஆசிரியர் தலைமையா சிரியர் பெருமக்களும், மாணவ மாணவிகளும்டி.ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான திரு.அப்துல் மாலிக் B.E., அவர்களின் இந்த தொண்டுள்ளப் பணியை சிறப்பித்து மனதாரப் பாராட்டினார் கள்.
*
- தாஜ் / செயலாளர்டி.
ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை
31.01.2009
*** *** *****











Friday, January 30, 2009

அப்துல் மாலிக் B.E., பங்கெடுத்த துபாய் நிகழ்ச்சி!

அப்துல் மாலிக் B.E., அவர்கள் பங்கெடுத்த துபாய் நிகழ்ச்சி!!
____________________________________________________






Monday, October 6, 2008

கல்வி விழா - 2008 / நமது நம்பிக்கை


கல்வி விழா - 2008
- நமது நம்பிக்கை (மாத இதழ்)
-----------------------------------------
நாள்: 13.07.2008 ஞாயிறு
இடம்: சீர்காழி பெரிய பள்ளிவாசல் அருகில்.
தாடளான் கோவில், சீர்காழி.
காலம்: மாலை 6-00 மணி
*
தலைமை: S.A.ஜெய்புதீன், தலைவர்,
நாட்டாண்மை பஞ்சாயத்து, தாடளான் கோவில், சீர்காழி.
*
முன்னிலை: A.முகம்மது உசேன்,
நாட்டாண்மை, தாடளான் கோவில், சீர்காழி.
*
வரவேற்புரை: கவிஞர். தாஜ்,
செயலாளர், T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை.
*
சிறப்புரை: Z.ஜபுருல்லா,
மாநில சிறுபான்மை ஆணையம், தமிழ்நாடு அரசு
*
டாக்டர். ஜெய. ராஜமூர்த்தி, M.B.B.S., DCH, FCI, FHIV.
*
S.இமயவரம்பன், தலைவர், விவசாயிகள் சங்கம்.
*
நிகழ்ச்சித்
தொகுப்பாளர் &
நன்றியுரை: வே. இரவிச்சந்திரன்,
இணை செயலாளர், T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை.
*
நன்றி: கவிஞர். தாஜ்,
செயலாளர், T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை.
*****
மேற்கண்ட நிகழ்ச்சி நிரலில் கண்டபடி
தாடளான் கோவில் வட்டத்தைச் சேர்ந்த
சுமார் அறுபதுக்கு மேற்பட்டபத்தாம்
வகுப்பு & பதிரெண்டாம் வகுப்புகளில்
தேர்வு பெற்ற மாணவ மாணவிகளுக்கு
ஊக்குவிப்பு பரிசாகவும், ஆருதல் பரிசாகவும்
ரூபாய் ஐம்பது ஆயிரம் அளவிலான பரிசுகளை வழங்கி......
சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு
மாணவ மாணவிகளுக்கும்
அவர்களது பெற்றோர்களுக்கும்
உலக கல்வியின் சிறப்புகள் குறித்த
தாக்கத்தை ஏற்படுத்திய
'கல்வி விழா - 2008'
குறித்து...
தினத் தந்தி, தினகரன், தின மலர், மக்கள் குரல் போன்ற தினசரிகள் படங்களுடன் செய்திகளை வெளியிட்டிருந்தன.
*
குறிப்பாய்...
'நமது நம்பிக்கை' என்கிற மாத இதழ்
தனது ஆகஸ்ட்டு - 2008 இதழில்
எங்களது 'கல்வி விழா - 2008'யை
சிறப்பிக்கும் முகமாக
விழாவின் படத்துடன் கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது.
சிறப்பிற்குறிய அந்தக் கட்டுரையை கீழே.....
வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.
'நமது நம்பிக்கை'க்கு எங்களது உளமார்ந்த நன்றி!
- தாஜ்....
செயலாளர், T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை.
***********

சீர்காழியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.
------------------------------------------------------------
*
சீர்காழி தாடளான் கோவில் பெரிய பள்ளிவாசல் அருகே 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டில் வாழும் முஸ்லீம் ஜமாத் அங்கத்தினர்கள் சார்பில் பரிசளிப்பு விழா நடைப்பெற்றது.
*
விழாவிற்கு, சீர்காழி தாடளான் கோவில் நாட்டாமை ஜெய்புதீன் தலைமை வகித்தார். முகம்மது உசேன் முன்னிலை வகித்தார்.
*
டி.ஏ. அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை செயலாளர் கவிஞர் தாஜ் வரவே ற்றார். தாடளான் பெரிய பள்ளிவாசல் இமாம்சையது முகம்மது ரஹ்மானி, அன்னை பாத்திமா நாயகி மதரஸா தலைவர் கமாலுதீன், செயலாளர் உசேன், செனாப் டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் அன்வர்தீன், மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் காமராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மோகந்தாஸ் அறிவா னந்தம், மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பாளர் அம்பிகாபதி, சீர்காழி 'யு.ஏ.இ.' எக்ஸ்சேன்ச் முகவர் நூர்முகம்மதுஉட்பட பலர் பாராட்டுரை வழங் கினர்.
*
மாநில சிறுபான்மை ஆணைய ஜபருல்லா, திருவெண்காடு டாக்டர் ஜெய.ராஜ மூர்த்தி, சீர்காழி விவசாயிகள் சங்கத் தலைவர் இமயவரம்பன் ஆகியோர் சிற ப்புரை ஆற்றினர்.
*
+2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ - மாணவியர்க்கு பரிசுகளை டாக்டர் அன்வர் அலி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ - மாணவியர்க்கு பரிசுகளை தாடளான் கோவில் நாட்டாண்மை ஜெய்புதீன், ஊக்கப் பரிசுகளை கவிஞர் தாஜ் ஆகியோரும் வழங்கினர். தேர்வு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு வழங்கிய ரொக்கப் பரிசுகளுக்கான மொத்தத் தொகை ரூ 50,000/-த்தை அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை வழங்கியது.
*
விழாவில் மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் மன்சூர் அலி, ஜேசீஸ் செயலா ளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
*
டி.ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை இணை செயலாளர் ரவிச்சந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.
************
பின் குறிப்பு:
கல்வி விழா - 2008ன் புகைப்படக் காட்சிகளை....
கீழே 'புகைப்பட முழுத் தொகுப்பு PART - 1 & PART - 2'
பகுதியில் காணலாம்.

Sunday, October 5, 2008

கல்வி விழா - 2008 / புகைப்பட முழுத் தொகுப்பு PART - 1

கல்வி விழா - 2008
************************
நாள்: 13.07.2008 - ஞாயிறு.
இடம்: சீர்காழி பெரிய பள்ளிவாசல் அருகில்,
தாடளான் கோவில், சீர்காழி.
காலம்: மாலை 6-00 மணி

T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளையும், வெளிநாட்டில் வாழும் சீர்காழிஇஸ்லாமிய ஜமாத்தைச் சார்ந்த அன்பர்களாலும்
நடைப் பெற்ற கல்வி விழா -2008ன்
முழு புகைப்படத் தொகுப்பின் முதல் பாகத்தை கீழே காணலாம்.

குறிப்பு: சீர்காழி அன்னைப் பாத்திமா அரபி மதரஸாவின்
லைபரரி / தையல் வகுப்பு / கம்யூட்டர் வகுப்பு சார்ந்த
சில புகப்படங்களும் இதில் நீங்கள் காணலாம்.
*********
- தாஜ்செயலாளர்
T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை, சீர்காழி.