Saturday, January 31, 2009

புத்தகப் பரிசளிப்பு விழா! ஜனவரி - 2009 / Part - 3

புத்தகப் பரிசளிப்பு விழா...
-----------------------------------
டி.ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை சார்பாக சென்ற வருடத்தைப் போ லவே இந்த வருடமும் மாணவ மாணவிகளுக்கு'சுய முன்னேற்றம் சார்ந்த' புத்தகங்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி சிறப்பிக்கும் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடந்தது. மதிப்பிற்குறிய திரு.லேனாதமிழ்வாணன் அவர் கள் எழுதிய 'முயன்றால் முடியும்' 'நேர நிர்வாகம்' என்கின்ற தலைப்புகள் கொண்ட அந்தப் புத்தகங்களை திரு.ரவிதமிழ்வாணன் அவர்கள் அந்த விழா வில் பங்கெடுத்து புத்தகங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்பித் தார்கள்.
*
23.01.2009 வெள்ளிக்கிழமை அன்று ஆக்கூர் அரபி மதரஸாவுக்கு உடபட்ட உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி, மாயூரம் ஆசாத் பெண்கள் உயர்நிலைப் பள்ளி வழியாக, சீர்காழியில் உள்ள அனைத்து உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் கான்வெண்ட்டுகளில் 10 & +2 படிக்கும் அனைத்து மாணவ மாணவிகள் பலனடையும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த விழா சிறப்புற நடைந்தேறியது.

ஆக்கூர் அரபி மதரஸாவுக்கு உடபட்ட உயர்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி விழா கோலமாகவே நடந்தது. அந்தப் பள்ளிக் கூடத்தின் பொறுப்பு நிர்வாகி யான ஜனாப். இக்பால் அவர்கள் மிகுந்த ஆர்வத்தேடு இந்த நிகழ்ச்சியை ஒழுங்குப் படுத்தி தந்து உதவினார்கள். அது போலவே மாயூரம் ஆசாத் உயர்நிலைப் பள்ளி நிகழ்ச்சியை ஜனாப். எஸ்கொயர் இக்பால் அவர்கள்
பொறுப்பேற்று ஒழுங்குப் பண்ணித் தந்தார்கள். சீர்காழி பள்ளிகளின் அனைத்து பொறுப்பாளர்களும், தலைமை ஆசிரியர்களும் நிகழ்ச்சி செவ்வன்னமே அமைய பெரும் தொண்டாற்றி உதவிப் புறிந்தார்கள்.
*
ஒவ்வொரு பள்ளியிலும் அந்தப் பகுதியை சார்ந்த, கல்விக்கு உறுதுணையாக இருப்பவர்களை அழைத்து, நிகழ்ச்சி மேடையில் அமர்த்தி அவர்களை கௌர வித்து அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை பெறுமைக் கொண்டது. திரு.ரவி தமிழ்வாணனுடன் சென்று எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொண்ட 'துபாய் சாதிக்' அவர்களுக்கும், இத்தனைப் பெரிய நிகழ்ச்சி நடந்தேற ஒட்டு மொத்த ஒருங்கிணைப்பாளராக இருந்து பணியாற்றிய அறக்கட்டளையின் இணைச் செயலாளர் திரு. ரவி அவர்களுக்கும் விவேகனந்தா பள்ளியின் விழா மேடையில் பொன்னாடைப் போற்றி சிறப்பும் செய்யப்பட்டது.
*
விழாவில் பங்கெடுத்த ஏனைய முக்கியஸ்தர்களும், ஆசிரியர் தலைமையா சிரியர் பெருமக்களும், மாணவ மாணவிகளும்டி.ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான திரு.அப்துல் மாலிக் B.E., அவர்களின் இந்த தொண்டுள்ளப் பணியை சிறப்பித்து மனதாரப் பாராட்டினார் கள்.
*
- தாஜ் / செயலாளர்டி.
ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை
31.01.2009
*** *** *****











No comments: