Monday, October 6, 2008

கல்வி விழா - 2008 / நமது நம்பிக்கை


கல்வி விழா - 2008
- நமது நம்பிக்கை (மாத இதழ்)
-----------------------------------------
நாள்: 13.07.2008 ஞாயிறு
இடம்: சீர்காழி பெரிய பள்ளிவாசல் அருகில்.
தாடளான் கோவில், சீர்காழி.
காலம்: மாலை 6-00 மணி
*
தலைமை: S.A.ஜெய்புதீன், தலைவர்,
நாட்டாண்மை பஞ்சாயத்து, தாடளான் கோவில், சீர்காழி.
*
முன்னிலை: A.முகம்மது உசேன்,
நாட்டாண்மை, தாடளான் கோவில், சீர்காழி.
*
வரவேற்புரை: கவிஞர். தாஜ்,
செயலாளர், T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை.
*
சிறப்புரை: Z.ஜபுருல்லா,
மாநில சிறுபான்மை ஆணையம், தமிழ்நாடு அரசு
*
டாக்டர். ஜெய. ராஜமூர்த்தி, M.B.B.S., DCH, FCI, FHIV.
*
S.இமயவரம்பன், தலைவர், விவசாயிகள் சங்கம்.
*
நிகழ்ச்சித்
தொகுப்பாளர் &
நன்றியுரை: வே. இரவிச்சந்திரன்,
இணை செயலாளர், T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை.
*
நன்றி: கவிஞர். தாஜ்,
செயலாளர், T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை.
*****
மேற்கண்ட நிகழ்ச்சி நிரலில் கண்டபடி
தாடளான் கோவில் வட்டத்தைச் சேர்ந்த
சுமார் அறுபதுக்கு மேற்பட்டபத்தாம்
வகுப்பு & பதிரெண்டாம் வகுப்புகளில்
தேர்வு பெற்ற மாணவ மாணவிகளுக்கு
ஊக்குவிப்பு பரிசாகவும், ஆருதல் பரிசாகவும்
ரூபாய் ஐம்பது ஆயிரம் அளவிலான பரிசுகளை வழங்கி......
சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு
மாணவ மாணவிகளுக்கும்
அவர்களது பெற்றோர்களுக்கும்
உலக கல்வியின் சிறப்புகள் குறித்த
தாக்கத்தை ஏற்படுத்திய
'கல்வி விழா - 2008'
குறித்து...
தினத் தந்தி, தினகரன், தின மலர், மக்கள் குரல் போன்ற தினசரிகள் படங்களுடன் செய்திகளை வெளியிட்டிருந்தன.
*
குறிப்பாய்...
'நமது நம்பிக்கை' என்கிற மாத இதழ்
தனது ஆகஸ்ட்டு - 2008 இதழில்
எங்களது 'கல்வி விழா - 2008'யை
சிறப்பிக்கும் முகமாக
விழாவின் படத்துடன் கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது.
சிறப்பிற்குறிய அந்தக் கட்டுரையை கீழே.....
வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.
'நமது நம்பிக்கை'க்கு எங்களது உளமார்ந்த நன்றி!
- தாஜ்....
செயலாளர், T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை.
***********

சீர்காழியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.
------------------------------------------------------------
*
சீர்காழி தாடளான் கோவில் பெரிய பள்ளிவாசல் அருகே 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டில் வாழும் முஸ்லீம் ஜமாத் அங்கத்தினர்கள் சார்பில் பரிசளிப்பு விழா நடைப்பெற்றது.
*
விழாவிற்கு, சீர்காழி தாடளான் கோவில் நாட்டாமை ஜெய்புதீன் தலைமை வகித்தார். முகம்மது உசேன் முன்னிலை வகித்தார்.
*
டி.ஏ. அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை செயலாளர் கவிஞர் தாஜ் வரவே ற்றார். தாடளான் பெரிய பள்ளிவாசல் இமாம்சையது முகம்மது ரஹ்மானி, அன்னை பாத்திமா நாயகி மதரஸா தலைவர் கமாலுதீன், செயலாளர் உசேன், செனாப் டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் அன்வர்தீன், மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் காமராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மோகந்தாஸ் அறிவா னந்தம், மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பாளர் அம்பிகாபதி, சீர்காழி 'யு.ஏ.இ.' எக்ஸ்சேன்ச் முகவர் நூர்முகம்மதுஉட்பட பலர் பாராட்டுரை வழங் கினர்.
*
மாநில சிறுபான்மை ஆணைய ஜபருல்லா, திருவெண்காடு டாக்டர் ஜெய.ராஜ மூர்த்தி, சீர்காழி விவசாயிகள் சங்கத் தலைவர் இமயவரம்பன் ஆகியோர் சிற ப்புரை ஆற்றினர்.
*
+2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ - மாணவியர்க்கு பரிசுகளை டாக்டர் அன்வர் அலி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ - மாணவியர்க்கு பரிசுகளை தாடளான் கோவில் நாட்டாண்மை ஜெய்புதீன், ஊக்கப் பரிசுகளை கவிஞர் தாஜ் ஆகியோரும் வழங்கினர். தேர்வு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு வழங்கிய ரொக்கப் பரிசுகளுக்கான மொத்தத் தொகை ரூ 50,000/-த்தை அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை வழங்கியது.
*
விழாவில் மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் மன்சூர் அலி, ஜேசீஸ் செயலா ளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
*
டி.ஏ.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை இணை செயலாளர் ரவிச்சந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.
************
பின் குறிப்பு:
கல்வி விழா - 2008ன் புகைப்படக் காட்சிகளை....
கீழே 'புகைப்பட முழுத் தொகுப்பு PART - 1 & PART - 2'
பகுதியில் காணலாம்.

No comments: